மாவட்ட செய்திகள்

பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Girls hostel College student Suicide by hanging

பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி, 

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர், அதே பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். இவருடைய மகள் சண்முகப்பிரியா (வயது 17). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவி சண்முகப்பிரியா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அண்ணாநகர் போலீசார், சண்முகப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? காதல் விவகாரமா? அல்லது குடும்ப பிரச்சினையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.