சாலை விபத்தில் படுகாயம் அடைந்த திருச்சி ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த திருச்சி ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
கரூர்
ஆயுதப்படை போலீஸ்காரர்
திருச்சி மாவட்டம் கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது48). இவர் திருச்சி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கரூர் வழியாக திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
சாவு
அப்போது, மதுரை-சேலம் பைபாஸ் சாலையில் வந்தபோது, நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையோர பள்ளத்தில் காந்தி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று போலீஸ்காரர் காந்தி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்த குறித்து கரூர் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story