ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 April 2021 11:41 PM IST (Updated: 16 April 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசுார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெள்ளியணை
தாலிச்சங்கிலி பறிப்பு
கரூர் தாந்தோன்றிமலை அருகே உள்ள முத்தலாடம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி சுமதி (வயது 36). இவர் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, பின்னர் தனது ஸ்கூட்டியில் வெள்ளியணை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளியணையை அடுத்த கல்லுமடை பகுதியில் சென்றபோது தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். 
அப்போது அதே வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் சுமதி கழுத்தில் கிடந்த  தாலிச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மின்னல் வேகத்தில் அவர்கள் தப்பி சென்றனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து சுமதி வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Next Story