1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை


1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 16 April 2021 11:48 PM IST (Updated: 16 April 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கொட்டித்தீர்த்த கன மழை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த 2 நாட்களாக லேசான தூறல் மழை மட்டுமே பெய்தது. கனத்த மழை பெய்யவில்லை. 
இதனால் ஏமாற்றமடைந்த பொது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நேற்று மதியம் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. 
தண்ணீர் தேங்கியது
இதனால் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ராமர் மட தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியது. குறிப்பாக  புதிய பஸ் நிலைய  பகுதியில் மழைநீர் ஏராளமாக தேங்கியது.  புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகத்தில் மழை நீர் உள்ளே புகுந்தது. இதனால் பூமாலை வணிக வளாகம் குளம் போல காட்சி அளிக்கிறது. 
திடீரென பெய்த இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story