மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 16 April 2021 11:49 PM IST (Updated: 16 April 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தனபால் (வயது 41). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் வேலைக்கு சென்று விட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தார்.  திருச்சி-தோகைமலை மெயின் சாலையில் வந்தபோது, அதே ஊரை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், தனபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனபால் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story