கரூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு இதுவரை ரூ.3¾ லட்சம் அபராதம்


கரூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு இதுவரை ரூ.3¾ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 16 April 2021 11:59 PM IST (Updated: 16 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு இதுவரை ரூ.3¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

கரூர்
கொரோனா 
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை முக கவசம் அணியாதவர்களுக்கும் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 
அபராதம் விதிப்பு
அதன்படி சுகாதாரத்துறை சார்பில் 481 பேரிடம் ரூ.96 ஆயிரத்து 200 அபராதமும், வருவாய்த்துறை சார்பில் 654 பேரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 800 அபராதமும், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 301 பேரிடம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 200 அபராதமும் என மொத்தம் 1,436 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

Next Story