தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
கரூர்
தடை செய்ய வேண்டும்
நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மனு அளித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மருத்துவர் சமூக மக்களையும், முடிதிருத்தும் தொழிலாளர்களையும் இழிவுப்படுத்தும் நோக்கத்தில் காட்சிகள் அமைந்த மண்டேலா திரைப்படத்தை தயாரித்த சக்ரவர்த்தி ராமச்சந்திரன், இயக்குனர் அஷ்வின் ஆகியோரை வன்மையுடன் கண்டிக்கின்றோம். சாதியை இழிவுப்படுத்தும் இந்த திரைப்படத்தை தடை செய்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story