நெல்லையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
நெல்லையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லை:
நெல்லையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நெல்லை ரெயில் நிலையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நெல்லை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் சரோஜா உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தூய்மை இந்தியா திட்ட அலுவலர் இளஞ்செழியன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சார்பில், ரெயில் நிலைய வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நடைமேடை பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டன.
ரெயில்வே ஊழியர்கள்
தொடர்ந்து ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்றனர். மொத்தம் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதில் நெல்லை ரெயில் நிலைய மேலாளர் முருகேசன், வணிக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் சதீஷ்குமார், டாக்டர் சீதா, அருள் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story