மோட்டார் சைக்கிள் விபத்தில் வலை கம்பெனி மேற்பார்வையாளர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் வலை கம்பெனி மேற்பார்வையாளர் சாவு
x
தினத்தந்தி 17 April 2021 12:18 AM IST (Updated: 17 April 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வலை கம்பெனி மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வலை கம்பெனி மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்பார்வையாளர்
திங்கள்சந்தை அருகே இரணியல் காஞ்சிரவிளையை சேர்ந்தவர் ராஜா (வயது 24). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வலை கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். 
நேற்று முன்தினம் இரவு ராஜா தனது மோட்டார் சைக்கிளில்  மேல்கரை பகுதியை சேர்ந்த நண்பரான சுபின்(24 ) என்பவருடன் இரணியல் காற்றடி மூடு சந்திப்பில் இருந்து முட்டம் செல்லும் சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
சுவரில் மோதியது
அப்போது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த காம்பவுண்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே, அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். சுபினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story