பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு


பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு
x
தினத்தந்தி 16 April 2021 7:23 PM GMT (Updated: 16 April 2021 7:23 PM GMT)

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

பெரம்பலூர்
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் (மே) அரசு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.  அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். அவர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதித்தும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே ஆய்வகங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40 அரசு பள்ளிகள் மற்றும் 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நல பள்ளி என மொத்தம் 45 பள்ளிகளில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வும் 12 தனியார் பள்ளிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 29 பள்ளிகளில்  தாவரவியல், விலங்கியல், உயரியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான செய்முறை தேர்வும் நடந்தது.  வருகிற 23-ந்தேதி வரை செய்முறை நடக்கிறது.


Next Story