விவசாயிகளுக்கு பயிற்சி
அருப்புக்கோட்டையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் அருப்புக்கோட்டை வட்டாரத்திலுள்ள கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மூன்று மாதங்கள் தங்கி களப் பயிற்சி மேற்கொள்கின்றனர். மானாவாரி சாகுபடியில் மழை குறைபாட்டினால் விதை முளைக்கும் தருணத்திலோ அல்லது பயிர் வளரும் நிலையில், வறட்சி ஏற்பட்டு கருகும் நிலை வருகிறது. இதை தவிர்த்து மகசூல் அதிகரிக்கும் முறைகள் குறித்தும், வறட்சியை தாங்கி வளர சீமை கருவேல் இலையில் விதை கடினப்படுத்துதல் முறைகள் குறித்தும், மாணவிகள் விமலா, வினிதா, அங்கயற்கண்ணி, காயத்ரி, ஹர்ஷிதா, கார்த்திகா ஆகியோர் விவசாயிகளுக்கு தெளிவான செயல்முறை விளக்கத்தை அளித்தனர்.
Related Tags :
Next Story