தீக்குளித்த தொழிலாளி சாவு
தளவாய்புரம் அருேக தீக்குளித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தன் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் ராமச்சந்திரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story