ரூ.13¾ கோடி வரி ஏய்ப்பு தனியார் நிறுவன இயக்குனர் கைது


ரூ.13¾ கோடி வரி ஏய்ப்பு தனியார் நிறுவன இயக்குனர் கைது
x
தினத்தந்தி 17 April 2021 1:30 AM IST (Updated: 17 April 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

ரூ.13¾ கோடி வரி ஏய்ப்பு தனியார் நிறுவன இயக்குனர் கைது

மதுரை, ஏப்
தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 2 நிறுவனங்கள் பல்வேறு துறைமுகங்களில் சரக்கு கையாளும் சேவையில் ஈடுபட்டு வந்தனர். அந்த 2 நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு முறையாக ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் வரிஏய்ப்பு செய்துவருவதாக மதுரை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்த 2 நிறுவனத்தினரும் தங்களது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.9.56 கோடி ஜி.எஸ்.டி. வரியை முறையாக அரசுக்கு செலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அந்த 2 நிறுவனத்தினரும் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.4.32 கோடியை உள்ளீட்டு வரியாக எடுத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையாளரின் உத்தரவின் பேரில், துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 2 நிறுவனங்களிலும் இயக்குனராக உள்ள நபரை கைது செய்து மதுரை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர். இந்த தகவல் மதுரை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையாளர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள் செய்திக்குறிப்பல் கூறப்பட்டுள்ளது.

Next Story