முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 April 2021 1:38 AM IST (Updated: 17 April 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தளவாய்புரத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில்  பலசரக்கு கடை, வங்கிகள், சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த பகுதியில் தளவாய்புரம் போலீசார் வாகனங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பேரூராட்சி நிர்வாகமும் இந்த பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story