மாவட்டத்தில் பரவலாக மழை
ராஜபாைளயம், அருப்புக்கோட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
ராஜபாளையம்,
ராஜபாைளயம், அருப்புக்கோட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பகுதியில் நேற்று காலை வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை திடீரென காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது.
ராஜபாளையம் நகர் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சம்சிகாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இந்த மழையினால் நகர்ப்பகுதிகளில் காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, காந்தி சிலை ரவுண்டானா, ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சிவகாசி
சிவகாசியில் நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பெய்தது. இதனால் இரவு முழுவதும் மிதமான காற்று வீசிக்கொண்டிருந்தது.
அருப்புக்ேகாட்டை
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து மின் வயர்கள் மேல் விழுந்ததால் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீச ஆரம்பித்தது. மாலை 4.45 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மலையானது மாலை 6.15 மணி வரை நீடித்தது.
1 மணி நேரம் பெய்த மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு கூட மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வந்த நிலையில் நேற்று பெய்த பலத்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குளம் போல் தேங்கியது
வத்திராயிருப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் மழை நீருடன், கழிவுநீரும் சேர்ந்து வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள ரோட்டடி தெருவில் உள்ள சாலையில் ஆறாக ஓடியது. இதேபோல் அக்ரஹாரம் வடக்குத்தெருவில் மழைநீர் செல்ல வடிகால் வசதி சரிவர இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது.
எனவே தாழ்வாக உள்ள கழிவுநீர் கால்வாய்களை உயர்த்தி கழிவுநீர் சீராக செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம், சுண்டங்குளம், ராசாப்பட்டி, சங்கர மூர்த்தி பட்டி, கொங்கன்குளம், புளியடிபட்டி, ஏ.லட்சுமி புரம், கீழாண்மறைநாடு, டி.கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. விருதுநகரிலும் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் பாவாலி ரோட்டில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
சாகுபடி பணி தீவிரம்
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணி, உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story