மாவட்ட செய்திகள்

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர் + "||" + The young man stabbed his false girlfriend in anger for refusing to speak

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர்

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர்
கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பெரம்பூர்,

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 26). இவர், பாரிமுனையில் உள்ள மிளகாய் மண்டியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, வியாசர்பாடியை சேர்ந்த 38 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த அந்த பெண்ணின் கணவர், மனைவியை கண்டித்தார். இதனால் உதயகுமாருடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டார். நேற்று முன்தினம் இரவு உதயகுமார், தனது கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அவருடன் அந்த பெண் பேச மறுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார், வீட்டில் இருந்த கத்தியால் கள்ளக்காதலியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் வயிறு, கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிக்பள்ளாப்பூர் டவுனில் வேறொருவடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
சிக்கபள்ளாப்பூர் டவுனில் வேறொருவருடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.