வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களுக்கு லேப்டாப்புடன் வெளிநபர்கள் வருகிறார்கள்


வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களுக்கு லேப்டாப்புடன் வெளிநபர்கள் வருகிறார்கள்
x
தினத்தந்தி 17 April 2021 7:34 PM GMT (Updated: 17 April 2021 7:34 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களுக்கு லேப்டாப்புடன் வெளிநபர்கள் வருகிறார்கள் என்று சோழவந்தான் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்

மதுரை
வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களுக்கு லேப்டாப்புடன் வெளிநபர்கள் வருகிறார்கள் என்று சோழவந்தான் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆன்லைன் வகுப்புகள்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் வாக்கு பெட்டி எந்திரங்கள் கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக கட்டிடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வளாகத்திற்குள் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறோம் என்ற பெயரில் அரசியல் கட்சிகளுக்கு உரிய தகவல்கள் சொல்லாமல் லேப்டாப்புடன் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது வாக்குப்பெட்டி எந்திரங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. எனவே வெளிநபர்கள் உள்ளே செல்வதை ஏற்க முடியாது.
இந்த பல்கலைக்கழக கட்டிடம் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் வந்த பிறகு பல்கலைக்கழக ஊழியர்களையோ அல்லது தேர்தல் பணிக்கு தொடர்பில்லாத எவரையும் அந்த கட்டிடத்தில் அனுமதிக்க கூடாது.
வெளிநபர்கள்
சில நபர்கள் நேர காலமின்றி பல்கலைக்கழக வளாகத்திற்கு எப்போது செல்கிறார்கள், அவர்களுக்கு யார் அனுமதி கொடுக்கிறார்கள் என்பது தெரியாமல் உள்ளது. எனவே கலெக்டர் இதுதொடர்பாக முடிவு எடுத்து மதுரை மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெளிநபர்களை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story