பிளஸ்-2 செய்முறை தேர்வு:பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆய்வு


பிளஸ்-2 செய்முறை தேர்வு:பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 17 April 2021 9:25 PM GMT (Updated: 2021-04-18T02:55:21+05:30)

பிளஸ்-2 மாணவர்கள் செய்முறை தேர்வை கல்வி அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குன்னம்
அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த செய்முறை தேர்வுகள் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2-வது நாளான நேற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சசிகலா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story