நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்


நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 18 April 2021 3:30 AM GMT (Updated: 18 April 2021 3:30 AM GMT)

கூடலூரில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கூடலூர்

கூடலூரில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர்.

நடுவழியில் நின்ற பஸ்

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலானவை மிகவும் பழைய பஸ்கள் ஆகும். இதனால் பஸ்கள் அடிக்கடி நடுவழியில் பழுதடைந்து நின்றுவிடுகிறது. 

இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு பந்தலூருக்கு சென்று கொண்டு இருந்தது. மரப்பாலம் பகுதியில் திடீரென நடுவழியில் பஸ் பழுதடைந்தது. 

உடனே பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் பழுது நீக்க முடியவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சாலையோரம் காத்து கிடந்தனர்

இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கினர். பின்னர் அரை மணி நேரம் சாலையோரம் காத்து கிடந்தனர். 

தொடர்ந்து வேறு பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் தாமதமாக பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர். 

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. முறையாக பராமரிக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

அரசு பஸ்கள் நிலை குறித்து உயர் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் நடுவழியில் பழுதாகி நின்று பயணிகள் அவதி அடையும் நிலை தொடருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story