ஊட்டி மஞ்சூரில இடி மின்னலுடன் பலத்த மழை


ஊட்டி மஞ்சூரில இடி மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 18 April 2021 2:55 PM GMT (Updated: 18 April 2021 2:55 PM GMT)

ஊட்டி மஞ்சூரில இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

 மேலும் இடி, மின்னலின் போது மஞ்சூர் பகுதியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் திடீரென பழுது ஏற்பட்டதால், மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில்  மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

 கிளன்மார்கன்-21, குந்தா-5, கிண்ணக்கொரை-8, பாலகொலா-18, குன்னூர்-10.5, கேத்தி-6, உலிக்கல்-30, கோடநாடு-9 உள்பட மொத்தம் 131.2 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 4.52 ஆகும். 

அதிகபட்சமாக கிளன்மார்கனில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.



Next Story