விராலிமலை முருகன் கோவிலில் மண்டல பூஜை


விராலிமலை முருகன் கோவிலில் மண்டல பூஜை
x
தினத்தந்தி 18 April 2021 5:52 PM GMT (Updated: 18 April 2021 5:52 PM GMT)

விராலிமலை முருகன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

விராலிமலை:
விராலிமலையில் சிறப்பு பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலை, மாலை இரு வேளையும் மலை மேல் உள்ள முருகன் வள்ளி தெய்வானைக்கு மண்டல அபிஷேகம் நடந்து வந்தது. இந்நிலையில் 48-வது நாள் மண்டல பூஜை விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி மாலையில் 108 புனித தீர்த்தக் குடங்கள் வைத்து முதல் கால யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று காலை 2-ம் கால யாக பூஜையானது தொடங்கி வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், திருப்பணி, கும்பாபிஷேக குழு நிர்வாகிகள் பூபாலன், அருண் சந்தானமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story