மாவட்ட செய்திகள்

திருவாரூரில் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது + "||" + In Thiruvarur, a demonstration was held on behalf of the farmers' union condemning the increase in fertilizer prices

திருவாரூரில் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது

திருவாரூரில் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது
திருவாரூரில் உரம் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர், 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உர விலையை கடுமையாக உயர்த்தியது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உரம் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கோஷம் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தம்புசாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் பழனிவேல், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித், நிர்வாகி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு உரம் விலையை வாபஸ் பெறக்கோரி கோஷம் எழுப்பினர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் செல்லத்துரை, முன்னாள் நகர செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டு உரம் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
2. கொரோனாவால் வியாபாரத்துக்கு தடை சென்னையில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து திருவிழாக்கால வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டியில் உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டியில் உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. விடுப்பு முறையில் மாற்றம் செய்ததை திரும்ப பெறக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுப்பு முறையில் மாற்றம் செய்திருப்பதை திரும்ப பெற கோரி தொழிலாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.