மாவட்ட செய்திகள்

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது + "||" + The man who was in hiding without appearing in court was arrested

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்த ராமானுஜத்தின் மகன் தமிழ்ச்செல்வன். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த செல்வகுமாருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறு தொடர்பாக தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் சென்னையில் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வந்தநிலையில் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அவரை வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுவிற்றவர் கைது
சாத்தூர் டவுன் போலீசார் மது விற்றவரை கைது செய்தனர்.
2. 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
3. வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
4. புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்தனர்.
5. மது விற்ற 17 பேர் கைது
சிவகாசி, சாத்தூர் பகுதியில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.