ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர பரிசோதனை: முக கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்; டிக்கெட் பரிசோதகர்கள் நடவடிக்கை


ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர பரிசோதனை: முக கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்; டிக்கெட் பரிசோதகர்கள் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 April 2021 8:27 PM GMT (Updated: 18 April 2021 8:27 PM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முக கவசம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அபராதம்
மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பயணச்சீட்டு இல்லாதவர்களிடம் இருந்தும் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் கூறும்போது, ‘ஈரோடு ரெயில் நிலையத்தில் தற்போது தீவிர சோதனை நடந்து வருகிறது. அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கும், பயணச்சீட்டு இல்லாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் நடைமேடை சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தால் அவர்களை பிடித்து ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்து வருகிறோம். அவர்களுக்கும் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

Next Story