மாவட்ட செய்திகள்

திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு + "||" + To become transgender Parental resistance Attempted suicide by slitting his throat By the teenager

திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு

திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக வாலிபரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறி வந்தார். அவரது நடை, உடை, பாவனைகள் திருநங்கை போல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அவரை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே கண்டித்து வைத்தனர்.

ஆனால் அவர், தான் முழுவதுமாக திருநங்கையாக மாறப்போவதாக கூறினார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக பெற்றோருடன் அவர் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் விரக்தி அடைந்த வாலிபர், வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய வைத்து இருந்த திராவகத்தை(ஆசிட்) எடுத்து குடித்து விட்டார். மேலும் கத்திரிக்கோலால் வயிற்றில் குத்திக்கொண்டதுடன், கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.