அரசு பஸ்சில் வேப்பிலை கட்டிய டிரைவர்


அரசு பஸ்சில் வேப்பிலை கட்டிய டிரைவர்
x
தினத்தந்தி 19 April 2021 4:53 PM GMT (Updated: 2021-04-19T22:23:43+05:30)

கொரோனா அச்சம் எதிரொலியாக அரசு பஸ்சில் டிரைவர் வேப்பிலை கட்டி உள்ளார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த 4 நாட்களில் 60-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து கரூர் சென்ற அரசு பஸ்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்சின் முன்பகுதி மற்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருக்கைக்கு இடையில் வேப்பிலைக்கொத்து கட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா பரவாமல் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்ற நம்பிக்கையில் வேப்பிலையை வைத்துள்ளதாக டிரைவர் தெரிவித்தார்.  பஸ்சில் செல்லும் பயணிகள் கட்டயாம் முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் அமர வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு பஸ் டிரைவர் வேப்பிலை கட்டி வைத்தால் நோய் தொற்று பரவாது என்று முழுவதும் வேப்பிலை கட்டியுள்ளார். 

Next Story