மாவட்ட செய்திகள்

முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி + "||" + Farmer killed in motorcycle collision on power pole near Muthupet

முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
முத்துப்பேட்டை அருகே மகள் திருமணத்துக்கு நாள் குறிக்க சென்ற போது மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் லிங்கத்தடி பள்ளியமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் முருகையன்(வயது47). விவசாயியான இவர் தனது மகளுக்கு திருமணம் தேதியை குறிப்பதற்காக இடும்பாவனத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றார். அடஞ்சவிளாகம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்ற போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் முருகையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து அவரது மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; கொத்தனார் பலி
கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார்.
2. மாங்காய் பறித்தபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
மாங்காய் பறித்தபோது அருகில் இருந்த மின்சார ‘டிரான்ஸ்பார்மரில்’ கை உரசியதில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3. கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டார்.
4. இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் வேகமாக பரவும் தொற்று; ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18 பேர் பலியான பரிதாபம்
புதுவையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியானார்கள். 1,819 பேர் பாதிக்கப்பட்டனர்.