மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + "||" + Penalty

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தோகைமலை,

கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கி இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று காலை தோகைமலை போலீஸ் நிலையம் அருகே சுகாதாரத்துறையினர் மமற்றும் போலீசார் நின்று கொண்டு முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் நோய் தொற்றின் தாக்கம் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் மீண்டும் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெருந்துறையில், கடந்த 2 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் கூடாரம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
பெருந்துறையில், கடந்த 2 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
2. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம்
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
3. வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
கொரோனா விதிமீறல் காரணமாக வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. காரைக்குடியில், கொரோனா கட்டுப்பாடு தீவிரம்
காரைக்குடி பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
5. ரூ.65 லட்சம் அபராதம் வசூல்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று கலெக்டர் கூறினார்.