திருமண நிகழ்ச்சியில் 50 சதவீத மக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை


திருமண நிகழ்ச்சியில் 50 சதவீத மக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 19 April 2021 8:56 PM GMT (Updated: 19 April 2021 8:56 PM GMT)

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 50 சதவீத மக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒலி, ஒளி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 50 சதவீத மக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒலி, ஒளி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு
தமிழக ‘ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன்’ சார்பில் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடுபவர்கள் உள்ளிட்டடோர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
நாங்கள் ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம் அமைப்பாளர்களாக உள்ளோம். எங்களுக்கு விழாக்கள் நடத்தப்படும்போது மட்டுமே வருமானம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கிடைக்கும் வருமானத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர்.
கோஷம்
கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பது வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்படைய செய்துள்ளது. எனவே கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடித்து 50 சதவீத மக்களுடன் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
முன்னதாக மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கோஷங்களை எழுப்பக்கூடாது என்று அறிவுறுத்தியதால், அவர்கள் மனு கொடுக்க சென்றனர்.

Next Story