மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூல் + "||" + A fine of Rs 11,000 was levied on those who did not wear helmets

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூல்

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூல்
முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூல்
மதுரை
கொரோனா நோய்ப்பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கடந்த 17-ந் தேதி முதல் ரெயில்வே நிர்வாகமும் ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் பெட்டிக்குள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டது. மதுரை ரெயில்வே கோட்டத்தில், கோட்ட மேலாளர் லெனின் உத்தரவின் பேரில் மதுரை, திண்டுக்கல், ராமேசுவரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக ரெயில் நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், பறக்கும்படை டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோருக்கு அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளில் மதுரை, ராமேசுவரம் மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த 7 பயணிகளிடம் இருந்து ரூ.3,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல, நேற்று பறக்கும்படை டிக்கெட் பரிசோதகர்கள் 11 பயணிகளுக்கும், மதுரையில் இருந்து சென்ற ரெயில்களில் 2 பயணிகளுக்கும், நெல்லையில் இருந்து சென்ற ரெயில்களில் 2 பயணிகளுக்கும் தலா ரூ.500 என ரூ.7,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஆக கடந்த 2 நாட்களில் மட்டும் மதுரை கோட்டத்தில் ரூ.11 ஆயிரம் முகக்கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்திற்குள் நுழையும் போதே கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால், பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். மேலும், முகக்கவசம் அணியாமல் வந்து அபராதம் செலுத்தும் பயணிகளுக்கு தென்னக ரெயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில், முகக்கவசமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. முககவசம் அணியாத 60 பேருக்கு அபராதம்
திருப்பத்தூரில் முககவசம் அணியாத 60 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்
3. திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4. ரூ.58 லட்சம் அபராதம் வசூல்
கொரோனா விதிமுறைகள் மீறல்; ரூ.58 லட்சம் அபராதம் வசூல்
5. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 12 கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.