பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது


பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 19 April 2021 9:09 PM GMT (Updated: 19 April 2021 9:09 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது.
செய்முறை தேர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 5-ந் தேதி நடைபெற இருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை ஒத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதே சமயம் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான செய்முறை தேர்வை கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி தமிழகத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
24-ந் தேதி
கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியுடன் மாணவ-மாணவிகள் அமர்ந்து தேர்வு எழுதினர்.
மாவட்டத்தில் 44 ஆயிரத்து 641 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகிறார்கள்.
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி மாதேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் செய்முறை தேர்வு கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வந்துள்ளார்கள். இந்தத் தேர்வு 24-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும், என்றார்.

Next Story