கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதியில் பெண் உள்பட 30 பேருக்கு கொரோனா


கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதியில் பெண் உள்பட  30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 April 2021 9:34 PM GMT (Updated: 19 April 2021 9:34 PM GMT)

கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதியில் பெண் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு் உள்ளது.

கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதியில் பெண் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு் உள்ளது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே நஞ்சைஊத்துக்குளியில் தனியார் தீவன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 69 பேர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நசியனூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
நேற்று வரை நடத்தப்பட்ட சோதனையில், தொழிலாளர்கள் 22 பேருக்கும், பொதுமக்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இவர்களும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இப்பகுதியில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடியில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கொடுமுடி மாதேஸ்வரன் வீதியைச் சேர்ந்த 72 வயது பெண் ஒருவருக்கும், 42 வயது ஆண் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கும் கொேரானா உறுதியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகள் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு ஏமகண்டனூர் பூவாண்டி கண்டர் வீதியில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ளவர்கள் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதனால் அந்த வீதி முழுவதும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 26 குடும்பங்களை சேர்ந்த 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story