மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கியது 6 பேர் உயிரிழப்பு + "||" + In Chengalpattu district, the corona epidemic killed nearly 6 people in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கியது 6 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கியது 6 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 970 பேர் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 970 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 59 ஆயிரத்து 421 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்தது. 7 ஆயிரத்து 872 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2038 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 638 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
2. 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
3. கொரோனாவுக்கு வாலிபர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். மேலும் 180 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனா குறித்து பயமில்லை; ஊரடங்கு பற்றி கவலையில்லை
கொரோனா குறித்து பயமில்லை. ஊரடங்கு பற்றி கவலையில்லாமல் சாலைகளில் பொதுமக்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்
5. ‘கொரோனா பற்றிய அச்சத்தாலும் மக்கள் உயிரிழக்கின்றனர்’ - உத்தரபிரதேச மந்திரி
கொரோனா பற்றிய அச்சத்தாலும் மக்கள் உயிரிழப்பதாக உத்தரபிரதேச மாநில மருத்துவக் கல்வி மந்திரி சுரேஷ் கன்னா தெரிவித்தார்.