கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக ஏலகிரிமலை, சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக ஏலகிரிமலை, சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஏலகிரிமலை
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை முக்கனிகளான மா, பலா, வாழை ஆகிய விளையும் இடமாக உள்ளது. இங்கு முருகன் கோவில், செயற்கை நீர்வீழ்ச்சி, படகு சவாரி மற்றும் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன. இதனால் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல நேற்று முதல் தடை விதித்துள்ளது.
வெறிச்சோடியது
இதனால் ஏலகிரிமலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் பொன்னேரி மலையடிவாரத்தில் சோதனைச்சாவடி அமைத்து அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை தீவிர சோதனைக்கு பிறகு அனுப்பி வைத்தனர். உள்ளூர் பொது மக்கள் மட்டுமே ஏலகிரி மலைக்கு சென்றனர். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் வரவில்லை.
இதனால் நேற்று ஏலகிரி மலையில் உள்ள பூங்கா, படகு இல்லம், செயற்கை நீர்வீழ்ச்சி ஆகியவை மூடப்பட்டு, ஏலகிரிமலை நேற்று சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story