ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு


ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
x
தினத்தந்தி 21 April 2021 1:19 AM IST (Updated: 21 April 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் நேற்று 2-வது டோஸ் தடுப்பூசி போட வந்த மக்களுக்கும், போலீசாருக்கும் மட்டுமே இருப்பு இருந்த தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்தி ஊசி போடப்பட்டது. புதிதாக தடுப்பூசி போட வந்த மக்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை, நாளை (அதாவது இன்று) வாருங்கள் என கூறி திருப்பி அனுப்பினா். ஈரோடு கலெக்டரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளதாக தொடர்ந்து கூறி வருவதை நம்பி, தடுப்பூசி போடும் மையத்திற்கு வரும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசியை அரசிடம் கேட்டு பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story