நச்சலூர் அருகே வீட்டை சேதப்படுத்தியவர் கைது


நச்சலூர் அருகே வீட்டை சேதப்படுத்தியவர் கைது
x
தினத்தந்தி 21 April 2021 1:25 AM IST (Updated: 21 April 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர் அருகே வீட்டை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்

நச்சலூர்
நச்சலூர் அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த மணிமாறன்-நாகராணியின் மகன் ராகுல். நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்த ராகுலை அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (27) என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன் அரிவாளால் வெட்ட முயன்றார். பின்னர் அரிவாளால் வீட்டின் கதவு, ஜன்னல் ஆகிய பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசில் நாகராணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story