கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை


கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
x
தினத்தந்தி 21 April 2021 2:04 AM IST (Updated: 21 April 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது

அழகர்கோவில்
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று  திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 339-ம், தங்கம் 96 கிராமும், வெள்ளி 524 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் திறப்பின் போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன், தக்கார் பிரதிநிதிநல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், பிரதிபா, நாராயணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
மேலும் சாய் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story