13 நாட்களில் ரூ.75¾ லட்சம் அபராதம் வசூல்


13 நாட்களில் ரூ.75¾ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 21 April 2021 2:05 AM IST (Updated: 21 April 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

13 நாட்களில் ரூ.75¾ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது

மதுரை
கொரோனா பரவுதலை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதமாக தலா ரூ.200 வசூல் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மாநகராட்சி, மாநகர போலீசார் மற்றும் வருவாய் துறையில் இந்த அபராதம் விதிக்கும் பணியினை மேற்கொண்டு உள்ளனர்.
மதுரை மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் மற்றும் பறக்கும் படையினர் மட்டும் கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ.75 லட்சத்து 72 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, தனி நபர் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் சென்று அபராதம் விதிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story