பாம்பு கடித்து மூதாட்டி சாவு


பாம்பு கடித்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 21 April 2021 2:15 AM IST (Updated: 21 April 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயம்(வயது 65). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஆளம்பள்ளம் கிராமத்திற்கு கடலை பறிப்பதற்காக சென்றுள்ளார். விஜயம் கடலை பறித்து விட்டு இரவில் வயலிலேயே தூங்கினார். அப்போது அவரை, கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story