கஞ்சித்தொட்டி திறந்து, கூலி தொழிலாளர்கள் போராட்டம்


கஞ்சித்தொட்டி திறந்து, கூலி தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 April 2021 2:16 AM IST (Updated: 21 April 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சித்தொட்டி திறந்து, கூலி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி:
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய சுமைப்பணி தொழிலாளர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர் ஆணையர் உத்தரவுப்படி, 55 கிலோ சுமை தூக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஓவர்லோடு ஏற்றுவதை தடை செய்ய வேண்டும்.
கூலி உயர்வு பேச்சுவார்த்தை விரைந்து நடத்தி கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தோடு போராட்டம் நடத்திட திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர் அங்கு பெரிய அண்டாவை வைத்து கஞ்சி காய்ச்சி கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த நூதன போராட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் சுமைப்பணி சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story