முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 April 2021 2:22 AM IST (Updated: 21 April 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு, இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், சுகாதார மேற்பார்வையாளர் திலீபன்சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு சோப்பு கொண்டு கை கழுவ வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்கள். சோழவந்தான் பெரிய கடைவீதி, மாரியம்மன் சன்னதி பகுதியில், முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Next Story