பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.14¾ லட்சம் உண்டியல் காணிக்கை
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியில் ரூ.14¾ லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தார்கள்.
கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 9 உண்டியல்கள் உள்ளன. இந்த நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணி பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஹரி, கோவில் செயல் அலுவலர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கோவில் பணியாளர்கள், கோபியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 675-ஐ உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 238 கிராம் தங்கம், 124 கிராம் வெள்ளி ஆகியவையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story