குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2021 2:44 AM IST (Updated: 21 April 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள ரோஸ்மியாபுரம் சுடலையாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சிவசங்கரன் (வயது 28). இவர் மீது திருக்குறுங்குடி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இதையடுத்து அவரை திருக்குறுங்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று சிவசங்கரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவை ஏர்வாடி போலீசார் நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் சமர்ப்பித்தனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் காந்திமதி தெருவை சேர்ந்த மாடக்கண்ணு என்பவரின் மகன் ராஜா (26). இவர் நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி, மானூர் பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் விஷ்ணு ஏற்றுக் கொண்டு ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் நேற்று ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Next Story