பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை பாலிடெக்னிக் மாணவர் போக்சோவில் கைது
பாலிடெக்னிக் மாணவர் போக்சோவில் கைது
ஓமலூர்:
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தாரமங்கலம் தெசவிளக்கு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 20). இவர் ராசிபுரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தெசவிளக்கு பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலிடெக்னிக் மாணவர் சவுந்தரராஜனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story