சித்தேரி சிதம்பரேஸ்வரர் கோவில் மேற்கூரை இடிந்து விழுந்தது


சித்தேரி சிதம்பரேஸ்வரர் கோவில் மேற்கூரை இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 21 April 2021 4:22 AM IST (Updated: 21 April 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

கோவில் மேற்கூரை இடிந்து விழுந்தது

தலைவாசல்:
தலைவாசல் அருகே சித்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளதுடன், கோவில் சிலைகள் பராமரிப்பின்றி காட்சி அளிக்கின்றன. சப்த கன்னிமார்கள் எழுந்தருளிய சிறப்பான தலமான இந்த கோவிலில் அம்பாள் சிலை உள்ள சன்னதியின் மேற்கூரையின் மரப்பலகைகள் சேதம் அடைந்து இடிந்து விழுந்துள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த கோவிலை சீரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story