சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
சூரமங்கலம்:
சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி உருக்காலை நுழைவுவாயிலில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ஜி.பெருமாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய சம்பள விகிதத்தை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி அன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் கூறினர்.
மேலும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளான 15 சதவீத ஊதிய உயர்வு, 35 சதவீத அலவன்ஸ், 9 சதவீத பென்சன் மற்றும் முழுமையான பணிக்கொடையை வழங்க உருக்காலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தம் செய்வதென முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.எல்.எப். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story