சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அங்கு ரெயில் நிலைய ஊழியர்கள், பொதுமக்கள், பயணிகள் என 45 வயதுக்கு மேற்பட்ட பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story