ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் நாளை மின்தடை
ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவள்ளூர்,
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
ஆவடி:- பட்டாலியன் 1 மற்றும் 2, முருகப்பா பாலிடெக்னிக், எச்.வி.எப்.சாலை, அண்ணா தெரு.
தரமணி மற்றும் சின்னமலை:-
எல்.டி.ஜி.சாலை, பார்க் டாக் அலுவலக சாலை, ஸ்ரீ நகர் காலனி (ஒரு பகுதி), தாமஸ் நகர், ஆரோக்கியமாதா தெரு, பிஷப் காலனி, கக்கன் புரம்.
சோத்துப்பெரும்பேடு:- பாரதியார் நகர், நல்லூர், குமரன் நகர், பன்னீர்வாக்கம், கம்மர்பாளையம், சோழவரம் (ஒரு பகுதி).
செங்குன்றம்:- மனிஷ் நகர், குமரன் நகர், அம்மன்தாங்கல், சோத்துப்பாக்கம் சாலை, சன் சிட்டி, ஜெய் துர்கா நகர், பெருங்காவூர் பஞ்சாயத்து.
திருமுல்லைவாயில்:- வேல்டெக், கற்பகம் நகர், கங்கா நகர், ஆண்டாள் நகர், பெருமாள் கோவில் தெரு, பிரியா நகர்.
ஆவடி (மிட்டனமல்லி) : பாலவேடு சாலை, காந்தி சாலை, மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை, சாபி நகர், டிபென்ஸ் காலனி, டிபென்ஸ் என்க்லேவ், எல்லியம்மன் நகர்.
பட்டினம்பாக்கம்:- பட்டினம்பாக்கம், மந்தவெளி, டி.என்.எச்.பி.குடியிருப்பு, சாந்தோம் நெடுஞ்சாலை, கற்பகம் அவென்யூ, கச்சேரி ரோடு, அப்பு தெரு, நொச்சிக்குப்பம் நகர், திருவள்ளுவர்பேட்டை.
பெரம்பூர்:- பேப்பர்மில்ஸ் சாலை, பந்தர் கார்டன் தெரு, சிறுவள்ளுவர் தெரு, வீனஸ் மார்க்கெட், முகமதியன் தெரு, எஸ்.ஆர்.பி. வடக்கு மற்றும் தெற்கு, ஜார்ஜ் காலனி, சுப்பிரமணிய தோட்டம், தாந்தோணியம்மன் கோவில் தெரு, சின்னசாமி ராஜா தெரு, பெசட் தெரு.
மாலை 5 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.
Related Tags :
Next Story