ஊட்டி சாலையில் கரடி நடமாட்டம்
இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் நடமாடியது.
ஊட்டி,
ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில், கம்பிசோலை உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் நடமாடியது. நள்ளிரவு என்பதால் அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் சென்று வந்தது.
பின்னர் கரடி சாலை வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. உணவு மற்றும் தண்ணீர் தேடி நகருக்குள் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஊட்டி காந்தல் பகுதி அருகே காட்டு யானைகள் வந்து சென்றது. நகருக்குள் கரடி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் இரவு நேரத்தில் கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story