11 பணிமனைகளில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


11 பணிமனைகளில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 April 2021 9:47 PM IST (Updated: 21 April 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 பணிமனைகளில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு வார ஓய்வை பறிக்கக்கூடாது, போக்குவரத்துக்கழக விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது, சம்பள பறிப்பு செய்யக்கூடாது, தொழிலாளர் துறை அறிவுரையை மீறக்கூடாது, பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைகள் எண் 1, 2, 3 ஆகியவற்றின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் மூர்த்தி, நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த குபேரன், மறுமலர்ச்சி தொழிற்சங்க நிர்வாகி மனோகரன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி குப்பன், அறிவர் அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொ.மு.ச. துணை தலைவர்கள் சந்திரசேகரன், பெருமாள், அமைப்பு செயலாளர் வேலு, பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் மனோகரன், ராஜேந்திரன் மற்றும் பணிமனை நிர்வாகிகள், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

இதேபோல் செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய பணிமனைகளிலும் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story